தீப்பற்றி எரிந்த பைக்: உயிர் தப்பிய வாலிபர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீப்பற்றி எரிந்த பைக்: உயிர் தப்பிய வாலிபர்

Added : அக் 06, 2021
Share
கண்டமங்கலம் : விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திபாலன், 32; இவர், புதுச்சேரி, காலாப்பட்டில் தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.நேற்று காலை தனது ஹோண்டா ஷைன் பைக்கில் சென்றார். விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் அடுத்த எம்.என்.குப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளி அருகே பெட்ரோல்

கண்டமங்கலம் : விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திபாலன், 32; இவர், புதுச்சேரி, காலாப்பட்டில் தனியார் மருந்து கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று காலை தனது ஹோண்டா ஷைன் பைக்கில் சென்றார். விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் அடுத்த எம்.என்.குப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளி அருகே பெட்ரோல் கசிவு காரணமாக பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது.அதிர்ச்சியடைந்த சக்திபாலன் பைக்கை நிறுத்தி விட்டு ஒடினார். பைக் டேங்க் வெடிக்கும் என்ற அச்சத்தால் தண்ணீர் ஊற்றி அணைக்க யாரும் முன் வராததால் பைக் முழுதும் எரிந்து சேதமானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X