தமிழ்நாடு

சரிசெய்யுங்க! அடிப்படை வசதிகள் இல்லா புற நகர்கள்

Added : அக் 06, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து வருவதில் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டுவதாக அங்கு வசிப்போர் குற்றம்சாட்டுகின்றனர்.மாவட்டத்தில் அந்தந்த ஊர்களில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் புறநகர் பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் உருவாகி 20, 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தவறாமல் சொத்து ,

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து வருவதில் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டுவதாக அங்கு வசிப்போர் குற்றம்சாட்டுகின்றனர்.

மாவட்டத்தில் அந்தந்த ஊர்களில் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் புறநகர் பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றும் உருவாகி 20, 25 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளன. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தவறாமல் சொத்து , குப்பை வரி என பலவித வரிகளை செலுத்துகின்றனர். ஆனால் இப்பகுதிகளுக்கு செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் மட்டும் ஆண்டுக்கணக்கில் இழுத்து கொண்டே செல்கிறது. புறநகர் பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான ரோடு, சாக்கடை, தெரு விளக்கு, குடிவசதிகள் கேட்டு பலமுறை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

நகர் பகுதிகளில் மட்டும் போட்ட இடங்களிலே ரோடு, சாக்கடை, தெரு விளக்கு என வசதிகள் செய்யப்படுகிறது. புற நகர் பகுதிகளில் வசதிகள் செய்ய அரசு நிதி ஒதுக்கவில்லை என உள்ளாட்சி அமைப்புகள் கூறுகின்றன.ஆனால் வரிகள் மட்டும் தவறாமல் வசூல் செய்கின்றனர் என்கின்றனர் குடியிருப்போர். மழை காலத்தில் தெருக்கள் சகதியாக மாறுவதால் நடந்து செல்ல கூட முடியவில்லை. தெரு விளக்கு இல்லாமல் இருளாக இருப்பதால் இரவு நேரத்தில் செல்ல சிரமப்பட வேண்டியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம்தான் வழி காண வேண்டும்.............

அவசியம் அடிப்படை வசதிகள்

பல ஊர்களில் நாளுக்கு நாள் புறநகர் பகுதிகள் உருவாகி கொண்டே செல்கின்றன. ஏற்கெனவே உருவாகிய புறநகர் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்யாமலேயே பல ஆண்டுகள் கடந்து விட்டது. புறநகர் பகுதி மக்களுக்கு தேவையான ரோடு, தண்ணீர், சாக்கடை வசதிகளை செய்ய உள்ளாட்சி அமைப்புகள் முன்வர வேண்டும். மக்கள் பணிகளில் அலட்சியம் காட்டுவதை தவிர்க்க வேண்டும்.அழகர்சாமி, சமூக ஆர்வலர் ,அருப்புக்கோட்டை..................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X