சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கையாடல்' கணவர் மனைவி தற்கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல் செய்த கணவரின் செயலால் மனமுடைந்த மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன், 42; கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலுார் கூட்டுறவு வங்கியில் தற்காலிக ஊழியர். இவரது மனைவி கலையரசி, 38; ஓராண்டுக்கு முன் வங்கியில் 4.20 லட்சம் ரூபாயை இளவரசன் கையாடல்

தியாகதுருகம் : கூட்டுறவு வங்கியில் பணம் கையாடல் செய்த கணவரின் செயலால் மனமுடைந்த மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன், 42; கள்ளக்குறிச்சியில் உள்ள திருக்கோவிலுார் கூட்டுறவு வங்கியில் தற்காலிக ஊழியர். இவரது மனைவி கலையரசி, 38; ஓராண்டுக்கு முன் வங்கியில் 4.20 லட்சம் ரூபாயை இளவரசன் கையாடல் செய்துள்ளார்.

மேலும், பலரிடம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் கலையரசி பல்லகச்சேரியில் உள்ள தந்தை முருகேசன் வீட்டில் தங்கியிருந்தார். மனமுடைந்த நிலையில் இருந்த கலையரசி நேற்று மதியம் 3:00 மணியளவில் வீட்டில் மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.முருகேசன் அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X