சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்புக் கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி

Added : அக் 06, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதி வாலிபர் இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கொள்ளார் கோட்டக்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் கோபி, 19; இவர், நேற்று தனது தாய் புவனேஸ்வரியுடன் பல்சர் பைக்கில் திண்டிவனம் சென்றவர் மதியம் 2:00 மணியளவில் மீண்டும் வீடு திரும்பினார்.அப்போது, முன்பக்க டயர் பஞ்சரானது. இருப்பினும் நிற்காமல்

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதி வாலிபர் இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கொள்ளார் கோட்டக்கரை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் கோபி, 19; இவர், நேற்று தனது தாய் புவனேஸ்வரியுடன் பல்சர் பைக்கில் திண்டிவனம் சென்றவர் மதியம் 2:00 மணியளவில் மீண்டும் வீடு திரும்பினார்.அப்போது, முன்பக்க டயர் பஞ்சரானது. இருப்பினும் நிற்காமல் ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர சிமென்ட் கட்டையில் மோதியது.இதில் இருவரும் காயமடைந்தனர். உடன், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, கோபி இறந்தார். காயமடைந்த புவனேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார். ரோஷணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X