பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் டாஸ்மாக் விற்பனையாளர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் பணியாளர் சங்க மாநில சிறப்புத் தலைவர் வலியுறுத்தல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
விழுப்புரம் : கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் டாஸ்மாக் விற்பனையாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.விழுப்புரத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம், உரக்கடம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் துளசிதரன் படுகொலை மற்றும் மற்றொரு ஊழியர் ராமு


விழுப்புரம் : கொலை செய்யப்பட்ட காஞ்சிபுரம் டாஸ்மாக் விற்பனையாளர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டம், உரக்கடம் டாஸ்மாக் கடை விற்பனையாளர் துளசிதரன் படுகொலை மற்றும் மற்றொரு ஊழியர் ராமு மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ராமுவின் மருத்துவ செலவு முழுதையும் டாஸ்மாக் நிர்வாகம் ஏற்க வேண்டும்.டாஸ்மாக் மூலம் ஆண்டுதோறும் 30 முதல் 40 கோடி ரூபாய் அரசு கஜானாவில் கொட்டிக் கொண்டிருக்கிறது. 30 ஆயிரம் பணியாளர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து 18 ஆண்டுகளாக பணியில் உள்ளனர்.

2 ஆண்டுகள் பணியாற்றினால் பணி நிரந்தரம் என்ற தொழிற்சங்க சட்டத்தைக்கூட அரசு அமல்படுத்தவில்லை.டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். சென்னையில் உள்ளது போன்று, அன்றாடம் வசூலாகும் பணத்தை வாகனம் மூலம் அல்லது வங்கி மூலம் நேரில் கடைக்கு வந்து வசூல் செய்ய வேண்டும்.இவ்வாறு பாலசுப்ரமணியன் கூறினார்.அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார், அமைப்புச் செயலாளர் ஏ.சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X