பராமரிப்பு இல்லாத -சிறுவர் பூங்கா; எரியாத தெருவிளக்குகள்

Added : அக் 06, 2021
Share
Advertisement
தேனி : பராமரிப்பு இல்லாத உடற்பயிற்சிக் கூடம், சேதமடைந்த சிறுவர் பூங்கா, அகற்றப்படாத கழிவுகளால் சுகாதாரக்கேடு; எரியாத தெரு விளக்குகள், குடிநீர் பற்றாக்குறை, குண்டும் குழியுமான ரோடால் போக்குவரத்திற்கு இடையூறு; கழிவுநீரோடைகளை ஆக்கிரமித்து கட்டிய வீட்டின் படிக்கட்டுகளால் தெருக்கள் சுருங்கியுளளது என பல்வேறு குறைபாடுகளால் சிரமப்படுவதாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி

தேனி : பராமரிப்பு இல்லாத உடற்பயிற்சிக் கூடம், சேதமடைந்த சிறுவர் பூங்கா, அகற்றப்படாத கழிவுகளால் சுகாதாரக்கேடு; எரியாத தெரு விளக்குகள், குடிநீர் பற்றாக்குறை, குண்டும் குழியுமான ரோடால் போக்குவரத்திற்கு இடையூறு; கழிவுநீரோடைகளை ஆக்கிரமித்து கட்டிய வீட்டின் படிக்கட்டுகளால் தெருக்கள் சுருங்கியுளளது என பல்வேறு குறைபாடுகளால் சிரமப்படுவதாக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 4வது வார்டு ஒருங்கிணைந்த அரசு நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குமுறுகின்றனர்.

இச்சங்கத்தில் பழனியப்பா நகர், அரசு நகர், சிவசக்தி நகரில் 14 தெருக்கள், 4 குறுக்குத்தெருக்கள் உள்ளன. சங்க பாதுகாவலர் பி.வி.கே, தெய்வேந்திரன், தலைவர் எஸ்.போஜராஜ், பொதுச் செயலாளர் எஸ்.மணிகண்டன், பொருளாளர் எம்.அய்யனார், ஒருங்கிணைப்பாளர்கள் டி.செந்தில் கணேஷ், மஞ்சுளா, உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மணிமேகலை, செல்வராணி, லதா, முருகேஸ்வரி, சுமதி உறுப்பினர்கள் தனவேலன் ஆகியோர் கூறியதாவது:எரியாத தெருவிளக்குகள்குடிநீர் வினியோக நேரத்தை அதிகரிக்க வேண்டும். தெருக்களில் உள்ள 40 மின்கம்பங்களில், 20ல் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகின்றனர். அரசு நகர், பழனியப்பா நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது. சிவகதி நகர் 1, 2,3 மற்றும் விரிவாக்கப் பகுதியில் உள்ள குறுக்குத் தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவில்லை. பழனியப்பா நகர் முதல் தெருவில் மழை நேரத்தில் ரோட்டில் பாதாள சாக்கடை நீர் கசிவு ஏற்பட்டு, புழுக்கள் வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.ரவுண்டானா அவசியம்அரசு நகர் முதல் தெருவில் ரூ.7500 கட்டணம் செலுத்தியும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவில்லை. அதே ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்பால் ரோடு குறுகலாகியுள்ளது. ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். கம்பம் ரோடு - அரசு நகர் சந்திப்பில் விபத்துக்களை தவிர்க்க 'ரவுண்டானா', உயர் கோபுர 'ஹைமாஸ்' விளக்கு அமைக்க வேண்டும். அதேப்பகுதியில் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்.பயன்பாட்டிற்கு வராத உடற்பயிற்சி கூடம்அரசு நகர் பிரதான ரோட்டில் பேரூராட்சி இடத்தை வரையறை செய்து தார்ரோடு அமைக்க வேண்டும். தெருக்களில் கார்கள், டூவீலர்கள் ஆக்கிரமித்து நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். சிவசக்தி நகரில் உள்ள உடற்பயிற்சி கூடம் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி முடக்கி வைத்துள்ளனர். மகளிர் - சிறுவர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X