ஆசைக்கு இணங்க மிரட்டல் நிதி நிறுவன ஊழியர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசைக்கு இணங்க மிரட்டல் நிதி நிறுவன ஊழியர் கைது

Added : அக் 06, 2021
Share
கடலுார் : பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், உண்ணாமலை செட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் ஏழுமலை. டிங்கரிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவர், கடலுார் செம்மண்டலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பைக்கை அடமானம் வைத்து ரூ. 24 ஆயிரம் கடன் வாங்கினார். கடனை திருப்பி செலுத்த அவருக்கு தாமதம் ஆனது.

கடலுார் : பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், உண்ணாமலை செட்டிச்சாவடியைச் சேர்ந்தவர் ஏழுமலை. டிங்கரிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவர், கடலுார் செம்மண்டலத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பைக்கை அடமானம் வைத்து ரூ. 24 ஆயிரம் கடன் வாங்கினார். கடனை திருப்பி செலுத்த அவருக்கு தாமதம் ஆனது.

இந்நிலையில் ஏழுமலையின் மனைவி முத்துலட்சுமி 42, புதுநகர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில்,'நிதி நிறுவன ஊழியரான சி.என்.,பாளையம், திடீர்குப்பத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் சிவா, 21; என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். தன்னிடம் கடனை கேட்டு ஆபாசமாக பேசினார். ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்து விடுவதாக மிரட்டி மானபங்கப்படுத்தினார்' என்று கூறியிருந்தார்.கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X