தமிழ்நாடு

வாடகை வாகனங்கள் கண்காணிப்பு அவசியம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
தேனி மாவட்டத்தில் அரசு துறைகளுக்கு தனித்தனியே வாகனங்கள் உள்ளன. இருப்பினும் வருவாய், மின்வாரியம் உள்பட மேலும் சில துறைகளில் அவசர கால பயன்பாட்டுக்கு கூடுதலாக வாகன தேவை உள்ளது. இதனால் சில துறைகளில் வாடகைக்கு தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த வாகனங்களை அரசு துறை அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் அவர்கள் சார்ந்த துறையுடன் 'அரசு

தேனி மாவட்டத்தில் அரசு துறைகளுக்கு தனித்தனியே வாகனங்கள் உள்ளன. இருப்பினும் வருவாய், மின்வாரியம் உள்பட மேலும் சில துறைகளில் அவசர கால பயன்பாட்டுக்கு கூடுதலாக வாகன தேவை உள்ளது. இதனால் சில துறைகளில் வாடகைக்கு தனியார் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வாகனங்களை அரசு துறை அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் அவர்கள் சார்ந்த துறையுடன் 'அரசு பணி', 'ஆன் டூட்டி' என பேப்பரில் எழுதி கண்ணாடியில் ஒட்டலாம்.ஆனால் சில வாடகை வாகன உரிமையாளர்கள் விதிமீறி 'அ', என்றும், ஆங்கிலத்தில் 'ஜி' எனவும் வாகன, பதிவெண் பலகைகளில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இது விதிமீறலாகும்.

ஏனென்றால் அதிகாரிகள் தங்கள் சொந்த வாகனங்களை அரசு பணிக்கு பயன்படுத்தினாலும் அதில் 'அ', ஜி ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்பது விதியாக உள்ளது.இவ்வாறு விதிமீறி ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் அரசு அதிகாரிகள் பயணிக்காதபோது குற்றசெயல்கள் அரங்கேற வாய்ப்புள்ளது. இதனால் போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X