பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளத்தில் பதிந்தாலே போதும் ரூ.2 லட்சம் காப்பீடு

Added : அக் 06, 2021
Share
Advertisement
தேனி : மத்திய அரசின் eSHRAM/NDUW இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கும்.100 நாள் வேலை, கட்டுமானம், விவசாயம், மீன்பிடி தொழிலாளர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆதார், வங்கி புத்தகம், அலைபேசி எண் கொண்டு இணையதளத்தில் பதிவு செய்யலாம். சுயமாக அல்லது மாவட்டத்தில் உள்ள 210 பொது சேவை

தேனி : மத்திய அரசின் eSHRAM/NDUW இணையதளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்தால் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு கிடைக்கும்.

100 நாள் வேலை, கட்டுமானம், விவசாயம், மீன்பிடி தொழிலாளர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆதார், வங்கி புத்தகம், அலைபேசி எண் கொண்டு இணையதளத்தில் பதிவு செய்யலாம். சுயமாக அல்லது மாவட்டத்தில் உள்ள 210 பொது சேவை மையங்களில் இலவசமாக பதியலாம். உடனடியாக நிரந்தர பதிவெண்ணுடன் அடையாள அட்டை கிடைக்கும். பிரதம மந்திரி சுரக் ஷ பீமா யோஜனா திட்டத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு பெறலாம்.

இனி தொழிலாளர்களுக்கான சமூக நலத்திட்டங்கள் இப்பதிவு அடிப்படையில் கிடைக்கும். அனைத்து தொழிலாளர்களும் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த இணையதளம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட பலசரக்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஆனந்தி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், ராஜா, சிவசங்கரி, நிவேதா ஆகியோர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X