நடிகை சஞ்சனாவுக்கு எதிராக டிரைவர் போலீசில் புகார்

Added : அக் 06, 2021
Share
Advertisement
பெங்களூரு : காரில் 'ஏசி' போடவில்லை என தகராறு செய்த நடிகை சஞ்சனா கல்ராணிக்கு எதிராக டாக்சி டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.பிரபல கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி, நேற்று காலை படப்பிடிப்புக்காக பெங்களூரு இந்திரா நகரில் இருந்து கெங்கேரிக்கு செல்ல வேண்டி இருந்தது. இதற்காக அவர் 'ஓலா' வாடகை கார் புக் செய்தார். ஆனால் அவர் கெங்கேரிக்கு பதிலாக ஆர். ஆர் நகருக்கு புக்

பெங்களூரு : காரில் 'ஏசி' போடவில்லை என தகராறு செய்த நடிகை சஞ்சனா கல்ராணிக்கு எதிராக டாக்சி டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி, நேற்று காலை படப்பிடிப்புக்காக பெங்களூரு இந்திரா நகரில் இருந்து கெங்கேரிக்கு செல்ல வேண்டி இருந்தது. இதற்காக அவர் 'ஓலா' வாடகை கார் புக் செய்தார். ஆனால் அவர் கெங்கேரிக்கு பதிலாக ஆர். ஆர் நகருக்கு புக் செய்து விட்டார்.காரில் ஏறியவுடன் காரை கெங்கேரிக்கு செல்ல வேண்டும் என கூறினார். அதற்கு டிரைவர் லொகேஷனை மாற்ற சொன்னார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை சஞ்சனா டிரைவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் காரில் 'ஏசி'யை அதிகப்படுத்துமாறு கூறி தகராறு செய்துள்ளார். இதை டிரைவர் வீடியோவும் எடுத்து வைத்துள்ளார்.இது குறித்து டாக்சி டிரைவர் மணி, ஆர்.ஆர். நகர் போலீசில் நடிகைக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.நடிகை சஞ்சனா கல்ராணி போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X