பொது செய்தி

இந்தியா

பிரியங்கா கைது ஜனநாயகத்துக்கு விரோதம்; காங்., தலைவர் சிவகுமார்

Added : அக் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தட்சிண கன்னடா : ''காங்கிரஸ் தலைவர் பிரியங்காவை போலீசார் கைது செய்தது, ஜனநாயகத்துக்கு எதிரானது,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா சென்றார். ஆனால் அம்மாநில போலீசார், அவரை தடுத்து, வீட்டு காவலில்

தட்சிண கன்னடா : ''காங்கிரஸ் தலைவர் பிரியங்காவை போலீசார் கைது செய்தது, ஜனநாயகத்துக்கு எதிரானது,'' என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா சென்றார். ஆனால் அம்மாநில போலீசார், அவரை தடுத்து, வீட்டு காவலில் வைத்தனர்.இது குறித்து, மங்களூரில் சிவகுமார் நேற்று கூறியதாவது:கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவது அரசியல் கட்சியின் எண்ணம். ஆனால் உத்தர பிரதேச போலீசார், ஆறுதல் கூற சென்ற பிரியங்காவை வீட்டு காவலில் வைத்தது ஜனநாயகத்துக்கு எதிரானது.அமைதியாக போராட்டம் நடத்துவது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமை.

அஹிம்சையை கையாளுமாறு, மஹாத்மா காந்தி எங்களுக்கு போதித்துள்ளார்.விவசாயிகள் பத்து மாதமாக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரதமரோ அல்லது வேறு எந்த அமைச்சரோ சந்தித்து அவர்களின் கோரிக்கையை கேட்கவில்லை.மத்திய அமைச்சரின் மகன், போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் மீது காரால் மோதி நான்கு பேர் இறப்புக்கு காரணமாகியுள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இரண்டு சம்பவங்களும் நடந்திருக்க கூடாது.இதுவரை சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்படவில்லை. எந்த அமைச்சரும் ராஜினாமா செய்யவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
06-அக்-202119:39:18 IST Report Abuse
RajanRajan ஜனநாயகத்திற்கு எதிராக அவிங்க பண்ணுனது என்னவெல்லாம் என்று பட்டியலிட்டு பாருப்பா ஈழ தமிழர் படுகொலையில் இருந்து நம்ம நோட் அடிக்கிற மிஷினை பாகிஸ்தான் தீவிரவாதிங்க கிட்டே விற்று துட்டு பார்த்தது வரை நல்ல பாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X