பொது செய்தி

இந்தியா

விஜயபுராவில் மீண்டும் நில அதிர்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
விஜயபுரா : விஜயபுராவில் நான்காவது முறையாக மீண்டும் நேற்று ஒரு முறை நில அதிர்வு ஏற்பட்டது. கட்டடங்கள் இடிந்து விடும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். விஜயபுரா திகோட்டா தாலுகாவின் பிஜ்ஜரகி, பாபா நகரா, சோமதேவரஹட்டி, கோனசகி, மலகனதேவரகட்டா, ஹுபனுாரா, சித்தாபுரா போன்ற பகுதிகளில் அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பூமி குலுங்கியது போன்ற உணர்வு

விஜயபுரா : விஜயபுராவில் நான்காவது முறையாக மீண்டும் நேற்று ஒரு முறை நில அதிர்வு ஏற்பட்டது. கட்டடங்கள் இடிந்து விடும் என்ற அச்சத்தில், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

விஜயபுரா திகோட்டா தாலுகாவின் பிஜ்ஜரகி, பாபா நகரா, சோமதேவரஹட்டி, கோனசகி, மலகனதேவரகட்டா, ஹுபனுாரா, சித்தாபுரா போன்ற பகுதிகளில் அக்டோபர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பூமி குலுங்கியது போன்ற உணர்வு ஏற்பட்டது. இதையடுத்து, விஜயபுரா மாவட்டத்தின் பசவனபாகேவாடி அருகே உள்ள மசூதி, முளவாடா உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் 3:09 மணிக்கு மீண்டும் பூமி குலுங்கியது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.அப்போது, மசூதி கிராமத்தில் பூமியில் பெரிய சத்தம் கேட்டது. இதனால் பள்ளிகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அலறி அடித்து ஓடி வந்தனர். அக்டேபார் 1ல் ஏற்பட்ட நில அதிர்வும் மசூதி கிராமத்தை மையமாக வைத்தே இருந்தது. செப்டம்பர் 4ல் நடந்த போதும் விஜயபுரா நகரம் குலுங்கியது. விஜயபுரா மாவட்டத்தில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படுவது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக காரணத்தை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X