பொது செய்தி

இந்தியா

பெண் குழந்தை விற்பனை

Added : அக் 06, 2021
Share
Advertisement
தங்கவயல் : தங்கவயல் தொகுதியின் பந்தரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நீலம்மா, பாபு தம்பதியின் பெண் குழந்தை, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆஷா ஊழியர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இதுபற்றி கூறப்படுவதாவது:கர்நாடகா -- ஆந்திரா எல்லையில் உள்ளது பந்தரபள்ளி கிராமம். இங்கு நீலம்மா, பாபு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை

தங்கவயல் : தங்கவயல் தொகுதியின் பந்தரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நீலம்மா, பாபு தம்பதியின் பெண் குழந்தை, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆஷா ஊழியர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி கூறப்படுவதாவது:கர்நாடகா -- ஆந்திரா எல்லையில் உள்ளது பந்தரபள்ளி கிராமம். இங்கு நீலம்மா, பாபு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், கடந்த மாதம் 6ல் நீலம்மாவுக்கு தங்கவயல் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அப்போது அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஆஷா பணியாளர் சந்தியா ராணி என்பவர், நீலம்மாவின் கணவரை அணுகி, குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்று பணம் தருவதாக கூறியுள்ளார்.

பணத்திற்கு ஆசைப்பட்ட அவர், குழந்தையை விற்க சம்மதம் தெரிவித்தனர். தடுப்பூசி போடுவதற்காக என கூறி, அந்த குழந்தையை ஆஷா பணியாளர் துாக்கிச் சென்றுள்ளார். அதன் பிறகு, குழந்தையை கொண்டு வரவில்லை. குழந்தை எங்கே என நீலம்மா கேட்ட போது, மழுப்பலாக பதிலளித்துள்ளார்.அதிர்ச்சி அடைந்த அந்த பெண், பேத்தமங்களா போலீசில் புகார் கூறினார். கணவரான பாபுவை போலீசார் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் படி, ஆஷா பணியாளர் சந்தியா, ரூபா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.நீலம்மாவின் குழந்தையை பணம் கொடுத்து வாங்கியவர்களிடம் இருந்து குழந்தையை மீட்க போலீசார் பெங்களூருக்கு விரைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X