டாஸ்மாக் பணியாளர்கள் முற்றுகை போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

Added : அக் 06, 2021
Share
திண்டுக்கல் : காஞ்சிபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திண்டுக்கல்லில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதி டாஸ்மாக் கடையில் பணியாற்றிய விற்பனையாளர் துளதிதாஸ் என்பவர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். ராமு என்பவர் படுகாயமடைந்தார். இதை கண்டித்து திண்டுக்கல்லில் அனைத்து டாஸ்மாக்

திண்டுக்கல் : காஞ்சிபுரம் டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திண்டுக்கல்லில் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதி டாஸ்மாக் கடையில் பணியாற்றிய விற்பனையாளர் துளதிதாஸ் என்பவர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். ராமு என்பவர் படுகாயமடைந்தார். இதை கண்டித்து திண்டுக்கல்லில் அனைத்து டாஸ்மாக் கடை பணியாளர்களும் அடையாள கடையடைப்பு நடத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி ரோட்டில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.சி.யூ., அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X