தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு அவசியம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
மழைக்காலங்களில் நன்னீரில் 'லார்வா'க்கள் மூலம் கொசுப் பெருக்கம் அதிகமாகிறது. இந்த கொசு பரவலால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்படுகின்றன.கொரோனாவிற்கு முன் டெங்கு தான் பிரதான நோயாக கருதப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் கொரோனாவிற்கு பின் டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்றே தோன்றுகிறது. அரசும் அதிக கவனம் செலுத்த

மழைக்காலங்களில் நன்னீரில் 'லார்வா'க்கள் மூலம் கொசுப் பெருக்கம் அதிகமாகிறது. இந்த கொசு பரவலால் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்படுகின்றன.கொரோனாவிற்கு முன் டெங்கு தான் பிரதான நோயாக கருதப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் கொரோனாவிற்கு பின் டெங்கு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்றே தோன்றுகிறது.

அரசும் அதிக கவனம் செலுத்த இயலாமல் போய்விட்டது.கொரோனா 3ம் அலை எச்சரிக்கை விடப்பட்டிருந்தாலும், தற்போது கொரோனா மெல்ல மெல்ல குறைந்துதான் வருகிறது. அதேநேரம் மழைக்காலம் தொடங்கியுள்ளது. எனவே டெங்கு, மலேரியா போன்றவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நடப்பு ஆண்டில் 83 ஆயிரத்து 803 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இதுவரை 2,930 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 337 பேர் சிகிச்சை பெற்று வருதாகவும் அரசு தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் கணிசமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். குறிப்பாக, கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். உள்ளாட்சி மன்றங்கள் வாயிலாக பணியாளர்களை நியமித்து வீடு வீடாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவமனையை அணுக எடுத்துரைக்க வேண்டும். வீடுகளுக்கு சென்று கண்காணித்து மருந்து வழங்குதல், கொசு பரவலை உருவாக்கும் பொருட்களை அகற்ற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் டெங்கு வரும் முன்பே காத்துக் கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X