பொது செய்தி

இந்தியா

பசுவதை தடுப்புச் சட்டம்; 20 சோதனைச் சாவடிகள்; எஸ்.பி. விஷ்ணுவர்த்தன்

Added : அக் 06, 2021
Share
Advertisement
உடுப்பி : ''கர்நாடகாவில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. எனவே, மாவட்டத்தில் கால்நடைகள் கடத்துவது தவிர்க்க, 20 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என மாவட்ட போலீஸ் எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் தெரிவித்தார்.கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் இருந்தபோதும், சிலர் சட்ட விரோதமாக இறைச்சிக்காக கால்நடைகளை கடத்துவது அடிக்கடி நடக்கிறது.கடந்த சில நாட்களுக்கு லாரியில்

உடுப்பி : ''கர்நாடகாவில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. எனவே, மாவட்டத்தில் கால்நடைகள் கடத்துவது தவிர்க்க, 20 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன,'' என மாவட்ட போலீஸ் எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலில் இருந்தபோதும், சிலர் சட்ட விரோதமாக இறைச்சிக்காக கால்நடைகளை கடத்துவது அடிக்கடி நடக்கிறது.கடந்த சில நாட்களுக்கு லாரியில் கடத்தப்பட்ட 30 கால்நடைகளை போலீசார் மீட்டனர். அப்போது வாகனத்தின் உள்ள, மூன்று பசுக்கள் மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது.இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., விஷ்ணுவர்த்தன், இரு சமுதாயத்தை சேர்ந்த பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:கர்நாடகாவில் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது. எனவே, மாவட்டத்தில் கால்நடைகள் கடத்துவது தவிர்க்க, 20 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.உடுப்பியில் அதிகளவில் சட்ட விரோதமாக கால்நடைகள் கடத்துவது நடக்கிறது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுாற்றுக்கணக்கான கால்நடைகள் மீட்கப்பட்டன.கால்நடை கடத்துபவர்களை போலீசில் ஒப்படைக்க வேண்டும். யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க கூடாது. குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதை வைத்து சிலர் சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்து நினைப்பர். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X