பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு

Added : அக் 06, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து நடந்த ஆய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் விசாகன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்தது: மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. டி.எஸ்.பி., தலைமையில் 7 மீட்புக்குழுக்கள் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள்,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து நடந்த ஆய்வு கூட்டம் நடந்தது.

கலெக்டர் விசாகன் முன்னிலை வகித்தார். கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்தது: மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன. டி.எஸ்.பி., தலைமையில் 7 மீட்புக்குழுக்கள் அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் உயிர்க்காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பழுதான, சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்கள், கம்பிகளை சரி செய்ய வேண்டும். பேரிடர் நேரத்தில் மின்சாரம் இல்லாத பகுதிகளில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்க வேண்டும், என்றார்.பின்னர் முருகபவனம் குப்பைக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிப்பதை பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., லதா, வன அலுவலர் பிரபு, கமிஷனர் சிவசுப்பிரமணியன், உதவி கலெக்டர் பிரியங்கா உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X