ஆபத்து கிணறும்; அருவருப்பு கழிப்பிடமும்; வீரசின்னம்பட்டி 6வது வார்டு அவலம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
நத்தம் : வீரசின்னம்பட்டி ஊராட்சி 6வது வார்டு 'அம்மன் பூஞ்சோலை நகர்'. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதற்கேற்ப அடிப்படை வசதிகள் மேம்படுத்த படாமல் உள்ளது.வீரசின்னம்பட்டி -- மருனுாத்து சாலையில் அம்மன் பூஞ்சோலைக்கு அருகிலேயே தடுப்புச் சுவரில்லாத, ஆபத்தான 80 அடி ஆழ கிணறு உள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பெரும் ஆபத்தை கடந்தே செல்கின்றன.

நத்தம் : வீரசின்னம்பட்டி ஊராட்சி 6வது வார்டு 'அம்மன் பூஞ்சோலை நகர்'. இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதற்கேற்ப அடிப்படை வசதிகள் மேம்படுத்த படாமல் உள்ளது.

வீரசின்னம்பட்டி -- மருனுாத்து சாலையில் அம்மன் பூஞ்சோலைக்கு அருகிலேயே தடுப்புச் சுவரில்லாத, ஆபத்தான 80 அடி ஆழ கிணறு உள்ளது. இதனால் இச்சாலையில் செல்லும் வாகனங்கள் பெரும் ஆபத்தை கடந்தே செல்கின்றன. பயன்பாடு இல்லாத கிணற்றை மூடச் சொல்லி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுப்பார்களா தெரியவில்லை. இப்பகுதியினரின் குமுறல்கள்:மினிபஸ் வேண்டும்தனபால், சமூக ஆர்வலர்:

வீரசின்னம்பட்டியில் இருந்து கோபால்பட்டி செல்ல மினிபஸ் இயங்கியது. தற்போது 4 மாதங்களுக்கும் மேலாக அந்தபஸ் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் இயக்க வேண்டும். இந்த நகரில் மினி குடிநீர் தொட்டி பழுதாகி பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படவில்லை. இதனால் தண்ணீர் தேவைக்காக தினமும் மக்கள் தவிக்கின்றனர். மருனுாத்து செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.பொது கழிப்பிடம் இல்லை கருப்பாயி அம்மாள்,தொழிலாளி: இங்கு பொது கழிப்பறை இல்லாததால், மக்கள் சாலையின் இருபுறங்களிலும் திறந்த வெளியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொது கழிப்பறை அவசியம் தேவை. முன்பு குப்பை வாங்க பணியாளர்கள் வருவர். சில மாதங்களாக அவர்களை காணோம். மேலும் சாக்கடையை சுத்தம் செய்யாததால், அடைப்பு ஏற்பட்டு கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.

குடிநீர் வினியோகம்அழகுமணி, இல்லத்தரசி: எப்போதும் அதிகாலை 4:30 மணிக்கு குடிநீர் வருகிறது. இதனால் தினசரி தூக்கம் கெடுகிறது. எனவே காலை 6:00 மணிக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும். எங்கள் குடியிருப்பு அருகே பெரிய காய்ந்த மரம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனை உடனே அகற்ற வேண்டும். இல்லையெனில் விபரீதம் விளைவதை தவிர்க்க முடியாது.வேகத்தடைகளை நீக்குககருப்பையா, விவசாயி: இப்பகுதியில் 'அம்மா' கிளினிக் துவங்கி 2 மாதங்களே செயல்பட்டது. கடந்த 3 மாதங்களாக திறக்கவில்லை. அம்மன் பூஞ்சோலை நகரில் 200 மீட்டர் ரோட்டில் 5 வேகத்தடைகள் உள்ளன. இதில் தேவையற்றதை அகற்ற வேண்டும். விதிமுறைகளை மீறி மறைமுகமாக மது விற்பனை நடக்கிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழியும் அபாயம் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை சரி செய்வது அவசர அவசியமாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X