கனமழையால் ஓடையில் உடைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கனமழையால் ஓடையில் உடைப்பு

Added : அக் 06, 2021
Share
எரியோடு : கனமழை பெய்ததால் எரியோடு கவுண்டன் குளம் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்குள் தண்ணீர் புகுந்தது.எரியோடு - வேடசந்தூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் கிழக்கு பகுதியில் கவுண்டன் குளம் ஓடை செல்கிறது. கொங்கர்குளம் மற்றும் பள்ளியின் மேற்கு பகுதியில் பெய்யும் மழை நீர், இந்த ஓடை வழியே கவுண்டன் குளத்திற்கு

எரியோடு : கனமழை பெய்ததால் எரியோடு கவுண்டன் குளம் ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்குள் தண்ணீர் புகுந்தது.

எரியோடு - வேடசந்தூர் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியின் கிழக்கு பகுதியில் கவுண்டன் குளம் ஓடை செல்கிறது. கொங்கர்குளம் மற்றும் பள்ளியின் மேற்கு பகுதியில் பெய்யும் மழை நீர், இந்த ஓடை வழியே கவுண்டன் குளத்திற்கு தண்ணீர் செல்லும்.இந்த ஓடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மராமரத்து பணி நடந்தது. இதில் பள்ளி அருகே நடந்த அளவு, அதற்கு அப்பால் துார்வாரும் பணி நடக்கவில்லை. இதனால் தண்ணீர் செல்ல வழியின்றி ஓடையில் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் ஓடையில் நீர் கரை மட்டத்திற்கு தேங்கியது. நேற்று காலை ஓடையின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால், பள்ளி மைதானத்திற்குள் தண்ணீர் புகுந்தது. விஷப்பூச்சிகளும் வளாகத்திற்குள் வந்தன. கரை உடைப்பை சீரமைக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X