மரோளி ஜெயநகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
தட்சிண கன்னடா : நகருக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது, கண்காணிப்பு கேமராவில் பதிவானதால், அதை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.கேமராவில் பதிவுதட்சிண கன்னடா, மங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட மரோளி ஜெயநகர் பகுதியில், செப்டம்பர் 3ல் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அது, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மறுநாள், கன்கடி பல்லால்குண்டேயில்

தட்சிண கன்னடா : நகருக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது, கண்காணிப்பு கேமராவில் பதிவானதால், அதை பிடிக்க வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.

கேமராவில் பதிவு
தட்சிண கன்னடா, மங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட மரோளி ஜெயநகர் பகுதியில், செப்டம்பர் 3ல் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. அது, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மறுநாள், கன்கடி பல்லால்குண்டேயில் சிறுத்தை தென்பட்டது. ஜெயநகர் பகுதியை சேர்ந்த பிரதிபா என்பவர், தன் இரு குழந்தைகளுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இவரின் மூத்த மகள் நிதி ஷெட்டி, மொபைல் போன் மூலம் படம் பிடித்து கொண்டே சென்றார். அப்போது திடீரென ஒரு விலங்கு கடந்து சென்றதை படம் பிடித்தார்.வீடு திரும்பிய பின் அந்த காட்சிகளை பார்த்தபோது சிறுத்தை ஓடியது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின், மறுநாள் கன்கனாடி பல்லால்குண்டே பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.இதையடுத்து, மண்டல வனத்துற அதிகாரி பிரசாந்த் பை தலைமையில் அதிகாரிகள் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, சிறுத்தையின் கால் தடம் நான்கு வெவ்வேறு பகுதியில் கண்டுபிடித்தனர். இதையடுத்து, நேற்று கால்நடை மருத்துவருடன் சிறுத்தையை தேடி வருகின்றனர்.கடந்த சில மாதங்களில் ஜெயநகர் பகுதியில் சுற்றித்திருந்த 25 நாய்கள் காணாமல் போயுள்ளன. எனவே, இந்த சிறுத்தை தான் நாய்களை கொன்றிருக்கும் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X