பொது செய்தி

இந்தியா

சொத்து வரி நேரடி வசூல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
துமகூரு : சொத்து வரி செலுத்தும்படி, துமகூரு மாநகராட்சி மேயர், கமிஷனர் வணிக வளாகங்களுக்கு நேரடியாக சென்று வசூலித்தனர்.துமகூரு மாநகராட்சி சில மாதங்களுக்கு முன் திடீரென சொத்து வரி உயர்த்தியது. கொரோனாவால் வருவாய் இன்றி தவிக்கும் வேளையில் வரி உயர்வு சரியில்லை என்று கட்டடம் மற்றும் நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பலரும், 5 லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம்

துமகூரு : சொத்து வரி செலுத்தும்படி, துமகூரு மாநகராட்சி மேயர், கமிஷனர் வணிக வளாகங்களுக்கு நேரடியாக சென்று வசூலித்தனர்.

துமகூரு மாநகராட்சி சில மாதங்களுக்கு முன் திடீரென சொத்து வரி உயர்த்தியது. கொரோனாவால் வருவாய் இன்றி தவிக்கும் வேளையில் வரி உயர்வு சரியில்லை என்று கட்டடம் மற்றும் நில உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பலரும், 5 லட்சம் ரூபாய் முதல், 10 லட்சம் ரூபாய் வரையில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளனர். மொத்தம், 80 கோடி ரூபாய் வரி வசூலாக வேண்டியுள்ளது.இந்நிலையில், மேயர் கிருஷ்ணப்பா, மாநகராட்சி கமிஷனர் ரேணுகா, வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவி நளினா ஆகியோர் வரி வசூலிப்பதில் நேரடியாக களத்தில் குதித்தனர்.துமகூரு நகரின் வணிக வளாகங்களில் நேற்று திடீரென சென்று வரி செலுத்தும்படி வலியுறுத்தினர். இது குறித்து, கமிஷனர் ரேணுகா கூறுகையில், ''பல முறை நோட்டீஸ் வழங்கியும், சொத்து வரி செலுத்தவில்லை. வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X