பொது செய்தி

இந்தியா

மரங்களை வெட்ட எதிர்ப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'பால புரூஹி' அரசினர் விருந்தினர் மாளிகை, அரசியல் அமைப்பு கிளப்பாக மாற்றப்படுவதால், அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு பசுமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரு வசந்த் நகரின் அரண்மனை சாலையில், பால புரூஹி என்ற பெயரில் அரசினர் விருந்தினர் மாளிகை உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1850ல், அப்போதைய மைசூரு மாகாணத்தின் கவர்னர் மார்க் கப்பன், இதை 14

பெங்களூரு : 'பால புரூஹி' அரசினர் விருந்தினர் மாளிகை, அரசியல் அமைப்பு கிளப்பாக மாற்றப்படுவதால், அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு பசுமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு வசந்த் நகரின் அரண்மனை சாலையில், பால புரூஹி என்ற பெயரில் அரசினர் விருந்தினர் மாளிகை உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1850ல், அப்போதைய மைசூரு மாகாணத்தின் கவர்னர் மார்க் கப்பன், இதை 14 ஏக்கரில் கட்டினார். கே.சி.ரெட்டி, நிஜலிங்கப்பா, தேவராஜ் அரஸ் ஆகியோர் தங்களுடைய அதிகாரபூர்வ இல்லமாக இதை பயன்படுத்தினர். முக்கிய பிரமுகர்கள் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், ஜவஹல்லால் நேரு, சர் எம்.விஸ்வேஸ்வரய்யா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இங்கு தங்கியுள்ளனர்.தற்போது, இந்த கட்டடத்தில், வெளி மாநிலங்களிலிருந்து வரும் எம்.எல்.ஏ., - எம்.பி., உயர் அதிகாரிகள் தங்க வைக்கப்படுவர். தற்போது அரசினர் விருந்து மாளிகையை, கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், எம்.பி.,க்கள் பயன்படுத்தும் வகையில், அரசியல் அமைப்பு கிளப்பாக மாற்றுவதற்கு சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி திட்டமிட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:டில்லியில் உள்ளது போல அரசியல் அமைப்பு கிளப்பாக இந்த வளாகம் மாற்றப்படும். பழங்கால கட்டடம் என்பதால் பெரிய மாற்றங்கள் செய்யப்படாது. சுற்று வட்டார பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றப்படும். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிருபர்கள் பயன்படுத்த தனி கிளப்கள் இருக்கிறது. அது போன்று, எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி கிளப் அமைக்கப்படும்.ஓய்வு பெறவும், புத்துணர்ச்சி பெறவும், முக்கிய விஷயங்கள் விவாதிக்கவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், இந்த வளாகத்தில் கட்டடங்கள் கட்டவும், பாதைகள் அமைக்கவும் நுாற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதற்கு பசுமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X