3.30 லட்சம் சிறார்களுக்கு பாலியல் கொடுமை; சர்ச் பாதிரியார்கள் மீது குற்றச்சாட்டு

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
பாரிஸ் : கடந்த 70 ஆண்டுகளில் பிரான்சின் கத்தோலிக்க சர்ச்களில், 3.30 லட்சம் சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.சிறைத் தண்டனை ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பெர்னார்டு பிரேநட் என்ற கத்தோலிக்க பாதிரியார், சிறார் பாலியல் வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டார். விசாரணையில் 75 சிறார்களுக்கு பாலியல்
sexual abuse, children, church, bishops

பாரிஸ் : கடந்த 70 ஆண்டுகளில் பிரான்சின் கத்தோலிக்க சர்ச்களில், 3.30 லட்சம் சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


சிறைத் தண்டனை


ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்ஸ் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பெர்னார்டு பிரேநட் என்ற கத்தோலிக்க பாதிரியார், சிறார் பாலியல் வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்டார். விசாரணையில் 75 சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக் கொண்டார். அவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனைவழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் உள்ள கத்தோலிக்க சர்ச்களில், 1950ம் ஆண்டு முதல் 2020 வரை சிறாருக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து, ஜீன் - மார்க் சாவி என்பவர் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தியது. இந்த ஆணையம், 2,500 பக்கங்கள் உள்ள விசாரணை அறிக்கையை கத்தோலிக்க தலைமை திருச்சபைக்கு அனுப்பிஉள்ளது.


latest tamil news




விசாரணை


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இரண்டரை ஆண்டுகள் நடந்த இந்த விசாரணையில் சிறார் மீதான பாலியல் கொடுமைகள்குறித்து வலுவான ஆதாரங்கள் உள்ளவற்றை மட்டுமே ஆணையம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக 70 ஆண்டுகளில் கத்தோலிக்க சர்ச்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 500 பாதிரியார்கள் உள்ளிட்டோர் குறித்து ஆணையம் ஆய்வு செய்தது. அதில், 3,000 பேர் பாலியல் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது.

அவர்களில் மூன்றில் இரு பங்கினர் பாதிரியார்கள். இந்த வகையில் 3.30 லட்சம் சிறார்கள், பெண்கள் உள்ளிட்டோர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இவற்றில் 40 பாலியல் குற்றங்கள் நடந்து மிக நீண்ட காலமாகி விட்டது. 22 குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டோரும் உயிருடன் உள்ளதால் வழக்கு தொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்ச்களில், சிறார் மீதான பாலியல் கொடுமைகளை தடுப்பது தொடர்பாக 45 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்தினால் எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - madurai,இந்தியா
11-அக்-202116:14:32 IST Report Abuse
தமிழன் இப்பவும் பிளஸ் சிம்பல் காட், ஆன் தி வே தான்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
08-அக்-202100:25:38 IST Report Abuse
Aarkay நித்யானந்தாவை வைத்து TRP rating-ஐ ஏற்றும் தொல்லைக்காட்சிகளும், இந்துப்பள்ளிகள் மீது மட்டும் தனி அக்கறை கொண்டு அவர்களுக்கு வேண்டிய தீர்ப்பு வரும் வண்ணம் சாட்சிகளை தயார் செய்யும் அரசு இயந்திரமும், இப்படிப்பட்ட குற்றங்கள் இங்கும் நிகழ்கின்றனவா என ஆராயாது. பாவாடைகளையும், ஹவாலாக்களையும் பகைத்துக்கொள்ள அவர்களுக்கேது தைரியம்?
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
07-அக்-202117:43:13 IST Report Abuse
M S RAGHUNATHAN ஏன் ஒரு தமிழக ஊடகம் கூட இதுபற்றி விவாதம் நடத்தவில்லை. ஓஹோ எல்லாம் கிருத்துவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்போது எப்படி நடத்துவார்கள். அல்லது ஒரு கான்ஸ்டன்டைன் ரவியோ, வக்கீல் சரவணன் அவர்களோ, கம்யூனிஸ்ட் அருணன், மனுஷ்ய புத்திரன், விக் ரவிக்குமார் ( இவர் திமுகவா அல்லது VCK யா) ஒருத்தனும் வாயை திறக்க காணோம். இங்கே ஓடி ஒளிந்து கொண்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X