பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் அந்தியூரில் வீடுகளில் புகுந்த வெள்ளம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த மழை பெய்தது. இதனால் அந்தியூர், நேருநகர் பகுதியில், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். வெள்ளத்தால் பாதித்த மக்களை, அருகிலுள்ள மண்டபத்தில்

அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு, பலத்த மழை பெய்தது. இதனால் அந்தியூர், நேருநகர் பகுதியில், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். வெள்ளத்தால் பாதித்த மக்களை, அருகிலுள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது. பலத்த மழையால் அந்தியூர் அருகே ஆதிரெட்டியூரில் கரும்பு பயிர், பெரிய ஏரிக்கரை அருகே மக்காச்சோள பயிர், மரவள்ளி செடிகள் நிலை சாய்ந்தன.

*அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், பாலமலை நேற்று காலை வரை வெகுநேரம் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இதைப்பார்த்து மக்கள் பரவசப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X