சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
சூலுார்:பீஹார் மாநிலம், நாளந்தா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சவுத்ரி,24. இவர், இரு மாதங்களுக்கு முன், தனது உறவினர்களான சந்தோஷ்குமார்,25, ரஞ்சித்குமார், பஜிர் சவுத்ரி, உகன் சவுத்ரி ஆகியோருடன் வேலைக்காக, கோவை மாவட்டம், சூலுார் வந்துள்ளார்.ஒரு பவுண்டரியில் அனைவரும் வேலை செய்து வந்தனர். ஒரே அறையில் தங்கி, ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வந்தனர். உகன் சவுத்ரி, சாப்பாட்டு

சூலுார்:பீஹார் மாநிலம், நாளந்தா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் சவுத்ரி,24. இவர், இரு மாதங்களுக்கு முன், தனது உறவினர்களான சந்தோஷ்குமார்,25, ரஞ்சித்குமார், பஜிர் சவுத்ரி, உகன் சவுத்ரி ஆகியோருடன் வேலைக்காக, கோவை மாவட்டம், சூலுார் வந்துள்ளார்.ஒரு பவுண்டரியில் அனைவரும் வேலை செய்து வந்தனர். ஒரே அறையில் தங்கி, ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வந்தனர். உகன் சவுத்ரி, சாப்பாட்டு செலவுக்கான பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.கடந்த, 3ம்தேதி இரவு, இருதரப்புக்கும் கைகலப்பு நடந்துள்ளது. இதில், சந்தோஷ்குமார் இரும்பு ராடால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் இறந்தார்.உகன் சவுத்ரி உள்ளிட்ட மூவரை தேடி, தனிப்படை போலீசார் பீஹார் விரைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X