பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்புக்கு தயார் நிலை: பல்வேறு துறைக்கு அறிவுறுத்தல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஈரோடு: கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் செப்.,1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர், பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு சென்று வருகின்றனர். நவ.,1 ம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு நேரடி வகுப்பு தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம

ஈரோடு: கொரோனா தொற்று பரவல் குறைந்ததால் செப்.,1 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர், பள்ளிகளில் நேரடி வகுப்புக்கு சென்று வருகின்றனர். நவ.,1 ம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்புக்கு நேரடி வகுப்பு தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள், சுகாதார துறை, போக்குவரத்து கழகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள், உரிய ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துவது, கழிவறை சுத்தம், மருந்து தெளித்தல், கிருமி நாசினி தெளித்தல், மாணவ, மாணவியர் தினமும் காலை, மாலை வேளைகளில் சென்று வரும் வகையில் பஸ்களை வழிதடத்தில் இயக்க நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி திறப்பு தொடர்பாக பல்வேறு துறையினர் மேற்கொள்ளும் ஏற்பாடுகளை, பள்ளி கல்வி துறையினர் உறுதி செய்து கொள்ளவும், பள்ளி துவங்குவதற்கு முன், துரிதப்படுத்தி கொள்ளவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X