பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சி துறை போட்டி: அரசுப்பள்ளி மாணவன் அசத்தல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பள்ளி நிலையிலான போட்டிக்கு ஆசிரியர்கள் கந்தசாமி, உஷா பேபி, ஷீலாதேவி; கல்லூரி அளவிலான போட்டிக்கு கண்ணன், குருமூர்த்தி, தினேஷ்வரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பள்ளி நிலையில், 37 மாணவ, மாணவியர்

ஈரோடு: ஈரோடு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பள்ளி நிலையிலான போட்டிக்கு ஆசிரியர்கள் கந்தசாமி, உஷா பேபி, ஷீலாதேவி; கல்லூரி அளவிலான போட்டிக்கு கண்ணன், குருமூர்த்தி, தினேஷ்வரன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். பள்ளி நிலையில், 37 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் பெரியண்ணா, ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி தினேஷ், ஈரோடு, கருங்கல்பாளையம் நகரவை மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா ஆகியோர், முதல் மூன்று பரிசாக, 5,000 ரூபாய், 3,000 ரூபாய், 2,000 ரூபாய் பெற்றனர். சிறப்பு பரிசை தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கல்பனா, ஒலகடம் அரசு மேல்நிலைப்பள்ளி நதியா பெற்றனர். கல்லூரி அளவிலான போட்டியில், 27 பேர் பங்கேற்றனர். இதில் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி ஹர்சிதா, சி.என்.கல்லூரி கவுரி, கோபி வெங்கடேஸ்வரா கலை கல்லூரி சீதாலட்சுமி ஆகியோர் முதல் மூன்று இடங்களுக்கான பரிசுத் தொகையை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X