பொது செய்தி

தமிழ்நாடு

தாளவாடியில் யூரியாவுக்கு தட்டுப்பாடு: மாவட்ட நிர்வாகம் கூடுதலாக ஒதுக்குமா?

Added : அக் 06, 2021
Share
Advertisement
தாளவாடி: தாளவாடி மலையில், யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கூடுதலாக உரம் ஒதுக்க, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் மானாவாரியாக மக்காசோளம், ராகி பயிர் சாகுபடி செய்கின்றனர். பயிர் வளர்ச்சிக்கு யூரியா உரமிடுவது வழக்கம். தற்போது, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காசோளம், 2,000 ஏக்கரில் ராகி

தாளவாடி: தாளவாடி மலையில், யூரியா உரத்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கூடுதலாக உரம் ஒதுக்க, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தாளவாடி மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் மானாவாரியாக மக்காசோளம், ராகி பயிர் சாகுபடி செய்கின்றனர். பயிர் வளர்ச்சிக்கு யூரியா உரமிடுவது வழக்கம். தற்போது, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மக்காசோளம், 2,000 ஏக்கரில் ராகி சாகுபடி செய்துள்ளனர். மழை பெய்து வரும் நிலையில், உரமிட்டால் பயிர் நன்றாக வளர்ச்சி அடையும். ஆனால், சில வாரங்களாக, தாளவாடியில் தனியார் உரக்கடை, கூட்டுறவு சங்கங்களிலும் யூரியா உரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.தாளவாடி கூட்டுறவு சங்க உரக்கிடங்குக்கு, நேற்று உரம் வந்ததை அறிந்த விவசாயிகள், 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒரு விவசாயிக்கு ஐந்து முதல் எட்டு மூட்டை யூரியா தேவைப்படுகிறது. ஆனால், ஒரு மூட்டை மட்டுமே வழங்கப்படுகிறது. உரம் குறைந்த அளவே இருப்பில் உள்ளது. தாளவாடி மலைப்பகுதிக்கு, மாவட்ட நிர்வாகம் கூடுதலாக உரம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X