பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாத பிளக்ஸ் கலாசாரம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஈரோடு: அரசு உத்தரவு, நீதிமன்ற வழிகாட்டுதல்களைக்கூட பின்பற்றாமல் பிளக்ஸ், பேனர், சிறு விளம்பர பலகைகளை வைத்து அச்சுறுத்துகின்றனர்.பிரமாண்ட பிளக்ஸ், பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் திசை திருப்பப்பகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. எனவே பேனர்கள் வைக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டது. செப்.,20க்குள் அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டது. அத்துடன் விழுப்புரத்தில் பேனர்

ஈரோடு: அரசு உத்தரவு, நீதிமன்ற வழிகாட்டுதல்களைக்கூட பின்பற்றாமல் பிளக்ஸ், பேனர், சிறு விளம்பர பலகைகளை வைத்து அச்சுறுத்துகின்றனர்.


பிரமாண்ட பிளக்ஸ், பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் திசை திருப்பப்பகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. எனவே பேனர்கள் வைக்க தடை விதித்து அரசு உத்தரவிட்டது. செப்.,20க்குள் அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டது. அத்துடன் விழுப்புரத்தில் பேனர் வைத்தபோது, சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவத்தில், நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. பேனர், பிளக்ஸ்களை அகற்ற, அவற்றை வைக்க எந்த வகையிலும் அனுமதி வழங்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. ஆனாலும், ஈரோடு மாநகர பகுதியில் பிளக்ஸ், பேனர், விளம்பர போர்டுகள், பாதுகாப்பற்ற முறையில் அவற்றுக்கு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், 'அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறினாலும், கலெக்டர் அலுவலக சாலை, பெருந்துறை சாலை, டீச்சர்ஸ் காலனி பகுதி, பழையபாளையம், சுவஸ்திக் கார்னர் பகுதி, மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்களைக்கூட விட்டு வைக்காமல் பிளக்ஸ்கள் நின்று சிரிக்கின்றன. குறிப்பாக, கட்டடங்களின் மீது மிக பிரமாண்டமாக வைத்துள்ள பிளக்ஸ்களை அகற்ற வேண்டும். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா பாலத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள சாலை கட்டடங்களையும், அவற்றின் மேலேயும், பிளக்ஸ்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. அவற்றை அகற்ற சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X