வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகுங்கள்'

Added : அக் 06, 2021
Share
ஈரோடு: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலை வகித்தார். இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும். மிதவை படகு, ரப்பர் ஜாக்கெட், மீட்பு

ஈரோடு: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஈரோட்டில் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலை வகித்தார். இதில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பேசியதாவது: வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, அனைத்து துறையினரும் தயாராக இருக்க வேண்டும். மிதவை படகு, ரப்பர் ஜாக்கெட், மீட்பு கருவிகள் தயார் நிலைப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும். மின்சாரம், பொதுப்பணித்துறை என அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஈரோடு மாவட்ட மக்கள் தொகையான, 23 லட்சத்து, 77 ஆயிரத்து, 315 பேரில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 லட்சத்து ஆயிரத்து, 291 பேர் உள்ளனர். இதில், 16 லட்சத்து, 32 ஆயிரத்து, 480 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மாவட்ட அளவில், 68.6 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத செயல்களுக்காக, 3.33 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X