சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிகாரியாக நடித்த மாஜி போலீஸ்காரர்; அரச்சலூர் அருகே காரில் விபரீத முடிவு

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஈரோடு: திண்டுக்கல் மாவட்டம் பழநி, வாகரை, மேற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 32; இவரின் மனைவி பிரேமலதா. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிவக்குமார் துவக்கத்தில் போலீசாக கோவையில் பணியாற்றினார். பின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தார். இதை குடும்பத்தினர் கண்டிக்கவே, சில மாதங்களுக்கு முன், திருப்பூர் வருமான வரித்துறை அலுவலகத்தில், அதிகாரி வேலை

ஈரோடு: திண்டுக்கல் மாவட்டம் பழநி, வாகரை, மேற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 32; இவரின் மனைவி பிரேமலதா. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சிவக்குமார் துவக்கத்தில் போலீசாக கோவையில் பணியாற்றினார். பின் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டில் இருந்தார். இதை குடும்பத்தினர் கண்டிக்கவே, சில மாதங்களுக்கு முன், திருப்பூர் வருமான வரித்துறை அலுவலகத்தில், அதிகாரி வேலை கிடைத்துவிட்டதாக, மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கூறினார். தினமும் காலையில் அலுவலகத்துக்கு செல்வதுபோல், வீட்டை விட்டு செல்லும் சிவக்குமார், மாலையில் வீடு திரும்பி விடுவார். நேற்று முன்தினம் காலை, வேலை விஷயமாக ஈரோடு செல்வதாக, வீட்டில் இருந்து காரில் சென்றுள்ளார். பிரேமலதா மொபைல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை. சந்தேகமடைந்த அவர் தந்தையிடம் கூறவே, திருப்பூரில் வருமான வரித்துறை அலுவலகத்தை, அவர் விசாரித்தார். சிவக்குமார் என்ற பெயரில் யாரும் வேலை செய்யவில்லை என்பது தெரிந்தது. இந்நிலையில் அரச்சலூர் அருகே ராட்டைசுற்றிபாளையத்தில், காரில் சிவக்குமார் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அரச்சலூர் போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, பிணத்தை அனுப்பி வைத்தனர். அரசு வேலையில் இருப்பதாக, குடும்பத்தினரிடம் நடித்து வந்ததை நினைத்து, மனமுடைந்து, பூச்சி மருந்து குடித்து, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X