சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் உள்பட 2 பேரிடம் ரூ.2.07 லட்சம் மோசடி

Added : அக் 06, 2021
Share
Advertisement
சேலம்: மேட்டூர், மாதையன்குட்டையை சேர்ந்தவர் எழிலகன் பிரபு, 33; காவேரிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். இவர், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட நிலையில், பொருட்களை கொள்முதல் செய்தால் சலுகை, கமிஷன் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்த அசாம், சிக்கிம் நிறுவனங்களுக்கு, 'போன்பே', வங்கி கணக்கில் ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 418 ரூபாய் செலுத்திய

சேலம்: மேட்டூர், மாதையன்குட்டையை சேர்ந்தவர் எழிலகன் பிரபு, 33; காவேரிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர். இவர், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட நிலையில், பொருட்களை கொள்முதல் செய்தால் சலுகை, கமிஷன் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்த அசாம், சிக்கிம் நிறுவனங்களுக்கு, 'போன்பே', வங்கி கணக்கில் ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 418 ரூபாய் செலுத்திய நிலையில், அதற்கான பொருளோ, கமிஷனோ தரவில்லை. இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவில் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப் பட்டியை சேர்ந்தவர் இந்துமதி, 24. இவரது மொபைல் போனுக்கு வந்த குறுந்தகவலில், 'ப்ளிப்கார்ட்' நிறுவனத்தில் பணிபுரிய இணைவோருக்கு, தினமும் சம்பளம், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் தெரிவித்திருந்த தொடர்பு எண்ணில் பேசியபோது, 'டிபாசிட்' தொகை செலுத்த தெரிவித்தனர். அதை நம்பி இந்துமதி, 77 ஆயிரத்து, 100 ரூபாய் செலுத்திய நிலையில், வேலையோ, பணமோ தரவில்லை. இந்துமதி புகார்படி, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X