பொது செய்தி

தமிழ்நாடு

25 இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை

Added : அக் 06, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழா கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது. இதில், காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்ற, ஐந்து பயனாளிகளிடம் பேசிய கலெக்டர் திவ்யதர்ஷினி அவர்களுக்கு பரிசு வழங்கியதுடன், 25 இலங்கை தமிழர்களுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கி பேசியதாவது: தர்மபுரி

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழா கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்தது. இதில், காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்ற, ஐந்து பயனாளிகளிடம் பேசிய கலெக்டர் திவ்யதர்ஷினி அவர்களுக்கு பரிசு வழங்கியதுடன், 25 இலங்கை தமிழர்களுக்கு காப்பீட்டு அட்டைகளை வழங்கி பேசியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம், பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில், 18 அரசு, தனியார் மருத்துவமனைகளில், இத்திட்டத்தில் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாவட்டத்தில், கடந்த நான்கு மாதங்களில், 4,277 பேருக்கு, 12.31 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த மே, 7ல் இருந்து, காப்பீட்டு திட்டத்தில், 646 பயனாளிகளுக்கு 6 கோடியே, 97 லட்சத்து, 2,400 ரூபாய் சிகிச்சைக்காக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். இதில், மருத்துவ, ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்குமார், மாவட்ட திட்ட அலுவலர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X