பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக போலீசில் புதிய பதவி? சிறப்பு எஸ்.ஐ., விபரங்கள் சேகரிப்பு

Updated : அக் 06, 2021 | Added : அக் 06, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை: தமிழகம் முழுவதும் பணியாற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்களின் விபர பட்டியல் தயாரிக்கப்பட்டு டி.ஜி.பி., அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், போலீசில் புதிய பதவி வழங்கப்படலாம் என, போலீசார் மத்தியில் தகவல் பரவியுள்ளது.தமிழக போலீசில் ஏட்டாக பணியில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும் வரை, ஏட்டாகவே சர்வீஸ் செய்யும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம்
தமிழகபோலீஸ், புதியபதவி, போலீஸ்,

கோவை: தமிழகம் முழுவதும் பணியாற்றும் சிறப்பு எஸ்.ஐ.,க்களின் விபர பட்டியல் தயாரிக்கப்பட்டு டி.ஜி.பி., அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில், போலீசில் புதிய பதவி வழங்கப்படலாம் என, போலீசார் மத்தியில் தகவல் பரவியுள்ளது.

தமிழக போலீசில் ஏட்டாக பணியில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும் வரை, ஏட்டாகவே சர்வீஸ் செய்யும் நிலை ஒரு காலத்தில் இருந்தது. எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் போலீசில் சேர்ந்து, 35 முதல் 40 ஆண்டுகள் வரை ஏட்டாகவே இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இந்நிலையை, முன்னாள் முதல்வர் கருணாநிதி மாற்றி சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு கொடுத்தார். மேலும், 2006-11ம் ஆண்டு காலக்கட்டத்தில் முதல்வராக இருந்தபோது ஏட்டாக சேர்ந்த, 15 ஆண்டுகளில் தலைமை காவலர், 25 ஆண்டுகளில் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கி உத்தரவிட்டார்.

இதன்தொடர்ச்சியாக, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் போலீசாருக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இதை சட்டசபையிலும் அறிவித்தார். பணி காலம், 58 வயதில் இருந்து, 60 வயதாக உயர்த்தியதால் பல போலீசார் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதையடுத்து 35 ஆண்டு பணி செய்தவர்களுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் பதவி கொடுக்க, அரசு ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அக்., 2022 வரை, 35 ஆண்டு பணி காலம் முழுமை செய்பவர்களின் பட்டியலை அனுப்ப மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. இதன்படி சிறப்பு எஸ்.ஐ.,க்களின் விபர பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil news




போலீஸ் வட்டாரத்தில் கூறும்போது, '‛ஒவ்வொரு மாவட்டத்திலும், 35 ஆண்டு சர்வீசில் சுமார், 60 பேருக்கு குறையாமல் இருக்கிறார்கள். அந்த வகையில் மாநிலம் முழுவதும், 2,000 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஸ்பெஷல் இன்ஸ்பெக்டர் பதவி வழங்கலாம் என்றும், இல்லையென்றால் அதற்கு ஏற்ப பண பலனாக ஊதியத்தை உயர்த்தி கொடுக்கலாம் என்றும் டி.ஜி.பி., அலுவலகத்தில் ஆலோசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது,'' என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
06-அக்-202116:08:32 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த இரண்டாயிரம் பேர் பதவி உயர்வுக்கு 2000× 300000 விடிந்தது.....
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
06-அக்-202114:30:35 IST Report Abuse
தமிழ்வேள் அதிகப்படி மாமூல் கொடுக்கவேண்டி வருமே ...புதிய பதவிக்கு தகுந்தபடி அல்லவா கேட்பார்கள் .....
Rate this:
Cancel
06-அக்-202114:27:46 IST Report Abuse
ஆரூர் ரங் எல்லோரையும்😇 பல்லக்கில் ஏற்றினால் சுமக்க ஆட்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X