விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

Added : அக் 06, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விவசாயிகள், விதை பரிசோதனை செய்து, அதன் முளைப்புத் திறனை அறிந்து சாகுபடி செய்ய வேண்டும் என, தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் ரவி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, விதை பரிசோதனை நிலையத்தில், ஒவ்வொரு பயிருக்கும் விதை பரிசோதனை செய்து, அதன் முளைப்புத்திறன் கண்டறியப்படுகிறது. அதன்பின் பயிரிடுவதால், பயிர்கள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட விவசாயிகள், விதை பரிசோதனை செய்து, அதன் முளைப்புத் திறனை அறிந்து சாகுபடி செய்ய வேண்டும் என, தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் ரவி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, விதை பரிசோதனை நிலையத்தில், ஒவ்வொரு பயிருக்கும் விதை பரிசோதனை செய்து, அதன் முளைப்புத்திறன் கண்டறியப்படுகிறது. அதன்பின் பயிரிடுவதால், பயிர்கள் செழித்து வளர்ந்து, விவசாயிகளுக்கு உற்பத்தியும் அதிகரிக்கும். இதில், மக்காச்சோளம், 90 சதவீதம், நெல், எள், கொள்ளு விதை, 80, சோளம், கம்பு, வீரிய ஒட்டு பயறுவகைகள், 75, நிலக்கடலை, சூரியகாந்தி, 70, மிளகாய் விதைகள், 60 சதவீதமும் முளைப்புத்திறன் இருக்க வேண்டும். இதை கணக்கிட்டு, விதை பரிசோதனை செய்து குறிப்பிட்ட காலஅளவுகளில் பயிரிட வேண்டும். எனவே, விவசாயிகள் தங்களது சொந்த விதைகளை விதைக்கும் முன், விதை பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு, விதை மாதிரி எடுத்து, தர்மபுரி விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பரிசோதனைக்கு, ஆன்லைன் மூலமாக, 30 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X