பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய ராணுவ கல்லூரியில் சேர அக்.,30க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கரூர்: இந்திய ராணுவ கல்லூரியில் சேர வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்க்கை தேர்வு டிச., 18ல் சில குறிப்பிட்ட இடங்களில் நடக்கிறது. இதில், சென்னை நகரிலும் தேர்வு நடக்கவுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நடக்கும்.

கரூர்: இந்திய ராணுவ கல்லூரியில் சேர வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்க்கை தேர்வு டிச., 18ல் சில குறிப்பிட்ட இடங்களில் நடக்கிறது. இதில், சென்னை நகரிலும் தேர்வு நடக்கவுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நடக்கும். இதற்கான விண்ணப்ப படிவத்தை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகாண்ட், டேராடூன், உத்ரகாண்ட் என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக பெறலாம். இந்த விண்ணப்ப படிவங்கள் மட்டுமே ஒப்புக்கொள்ளப்படும் மற்றும் தனிப்பட்ட முறையில் அச்சிடப்பட்ட ஒளிநகல் எடுக்கப்பட்டவை நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள், 11-13 வயதுக்குள் இருத்தல் வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில, 7 ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் ( இரட்டையாக ) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய சாலை, பூங்கா நகர், சென்னை-3 என்ற முகவரிக்கு வரும், 30க்குள் அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு, www.rimc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X