அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: மாயனூருக்கு குறைந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: மாயனூருக்கு குறைந்தது

Added : அக் 06, 2021
Share
கரூர்: அமராவதி அணைக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு கடந்த சில நாட்களாக சராசரியாக வினாடிக்கு, 500 கன அடிக்கும் குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, 562 கன அடி தண்ணீர் அணைக்கு வந்தது. அமராவதி அணையில் இருந்து

கரூர்: அமராவதி அணைக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.


திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு கடந்த சில நாட்களாக சராசரியாக வினாடிக்கு, 500 கன அடிக்கும் குறைவாகவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, 562 கன அடி தண்ணீர் அணைக்கு வந்தது. அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆற்றில் வினாடிக்கு, 400 கன அடி மட்டும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது, 82.68 அடியாக உள்ளது. மாயனூர் கதவணை நிலவரம்: நேற்று முன்தினம் காலை மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 8,024 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை தண்ணீர் வரத்து, 6,522 கன அடியாக குறைந்தது. காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்காக, 5,852 கன அடியும், நான்கு கிளை வாய்க்காலில், 670 கன அடியும் திறக்கப்பட்டது. கரூர் மாவட்ட மழை நிலவரம் (மி.மீ.,) : அணைப்பாளையம், 6.2, க.பரமத்தி, 8.6 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 1.23 மி.மீ., மழை பெய்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X