பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர்களை ஆதரித்து மாஜி அமைச்சர்கள் பிரசாரம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, மாஜி அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.கரூர் மாவட்ட கவுன்சிலர் எட்டாவது வார்டு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் தொழில் துறை அமைச்சர் சின்னசாமி, நேற்று தான்தோன்றி மலை

கரூர்: கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, மாஜி அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.


கரூர் மாவட்ட கவுன்சிலர் எட்டாவது வார்டு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக, எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் தொழில் துறை அமைச்சர் சின்னசாமி, நேற்று தான்தோன்றி மலை பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மாவட்ட, அ.தி.மு.க., அவைத்தலைவர் காளியப்பன், பா.ஜ., பொதுச் செயலாளர் நகுலன், புனிதா, செய்தி தொடர்பாளர் மாரிமுத்து உள்பட பலர் உடனிருந்தனர்.


* க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் எட்டாவது வார்டு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக செல்வராஜ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், மொஞ்சனூர் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். பஞ்சாயத்து யூனியன் தலைவர் மார்க்கண்டேயன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X