குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே, தார்ச்சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டாங்கோவில் பிரிவு சாலை வழியாக ஆண்டாங்கோவில், ஆண்டாங்கோவில் மேற்கு, விஸ்வநாதபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, வணிகம், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்காக, நான்கு, இரண்டு

கரூர்: கரூர் அருகே, தார்ச்சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.


கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், ஆண்டாங்கோவில் பிரிவு சாலை வழியாக ஆண்டாங்கோவில், ஆண்டாங்கோவில் மேற்கு, விஸ்வநாதபுரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, வணிகம், மருத்துவமனை உள்ளிட்டவைகளுக்காக, நான்கு, இரண்டு சக்கர வாகனங்களில் தினமும் ஏராளமானோர் கரூர் செல்கின்றனர். இச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து, காயமடைவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஆண்டாங்கோவில் பிரிவு சாலை அடிக்கடி சேதமாகிவிடுகிறது. பல முறைக்கு மேல் சாலையை சீரமைத்தும் பலன் இல்லை. கரூர் நகரில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு, இங்கிருந்து ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். இரவில் வீடு திரும்பும் அவர்கள், சாலையில் விழுந்து காயமடைந்து விடுகின்றனர். ஏதாவது விபரீத சம்பவங்கள் நடக்கும் முன், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X