செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் முறையீடு போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் முறையீடு போராட்டம்

Added : அக் 06, 2021
Share
நாமக்கல்: நாமக்கல்லில், எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். அதில், தமிழகத்தில் மருத்துவ சேவையை வலுப்படுத்தும் வகையில், கூடுதலாக

நாமக்கல்: நாமக்கல்லில், எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். அதில், தமிழகத்தில் மருத்துவ சேவையை வலுப்படுத்தும் வகையில், கூடுதலாக செவிலியர்களை பணியமர்த்த வேண்டும். தேர்தல் காலத்தில் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக ஒப்பந்த செவிலியர்கள் அனைவருக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. மாவட்ட துணைத்தலைவர் மும்தாஜ், மாவட்ட செயலாளர் நாகராஜ், தமிழக அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், பொது சுகாதாரத் துறை சங்க மாவட்ட செயலாளர் இளவேந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X