வடிகாலில் குப்பை கொட்ட வேண்டாம்; கலெக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடிகாலில் குப்பை கொட்ட வேண்டாம்; கலெக்டர்

Added : அக் 06, 2021
Share
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளருமான தயானந்த கட்டாரியா, கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் ஸ்ரேயா சிங் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிபாளையம் பகுதியில் நீர்நிலைகள், வடிகாலில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதை

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளருமான தயானந்த கட்டாரியா, கலெக்டர் ஸ்ரேயா சிங் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் ஸ்ரேயா சிங் நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளிபாளையம் பகுதியில் நீர்நிலைகள், வடிகாலில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதை கண்டறிந்து அகற்றப்படும். நான்குசாலை சந்திப்பு வடிகாலில் குப்பை அடைப்பு இருந்ததால், மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அடைப்புகள் அகற்றப்பட்டு விட்டன. ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்துறையினர் கண்டறிந்து வருகின்றனர். சர்வே முடிந்தவுடன் அகற்றப்படும். நீர்வழித்தடத்தில் உள்ள முட்புதர்களை தொடர்ந்து அகற்றி வருகிறோம். ஐந்து மணி நேரத்தில், 92 மி.மீ., மழை பெய்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏரி உடைப்பு இல்லை. பாதிக்கப்பட்ட பகுதியை ஐந்தாறு மணி நேரத்தில் சீரமைக்கப்பட்டு விட்டது. பொதுமக்கள் வடிகாலில் குப்பை கொட்டக்கூடாது. மழை தண்ணீர் சீராக செல்ல, நான்குசாலை பகுதியில் செல்லும் வடிகால் விரிவுபடுத்தப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X