பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு

Added : அக் 06, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இயற்கை விளை பொருட்கள் உற்பத்தி செய்தல், பதனிடுதல் மற்றும் விற்பனைக்கு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண் திட்டத்தின்படி, அட்டா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில், அங்ககச்சான்று எனப்படும் இயற்கை வேளாண் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்: நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இயற்கை விளை பொருட்கள் உற்பத்தி செய்தல், பதனிடுதல் மற்றும் விற்பனைக்கு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண் திட்டத்தின்படி, அட்டா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில், அங்ககச்சான்று எனப்படும் இயற்கை வேளாண் சான்று வழங்கப்பட்டு வருகிறது. அங்ககச்சான்று பெற தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்யலாம். மேலும் வனப்பொருட்களை சேகரிப்பு செய்பவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். பெரு வணிக நிறுவனங்களும், அங்கக பொருட்களை பதன் செய்வோரும் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். அங்ககச் சான்றிதழ் பெற விண்ணப்ப படிவம் பண்ணையின் பொது விபர குறிப்புகள் பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர்த்திட்டம், துறையுடனான ஒப்பந்தம் மூன்று நகல்கள், நில ஆவணம், வருமான வரி கணக்கு எண், அட்டை ஆதார் அட்டை, புகைப்படம் ஆகியவை உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம், ஆய்வு கட்டணம் மற்றும் பயண கட்டணமாக ஆண்டுக்கு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மொத்தம், 2,700 ரூபாய். இதர விவசாயிகள், 3,200 ரூபாய், குழுவாக பதிவு செய்ய, 7,200 ரூபாய் மற்றும் பெரு வணிக நிறுவனங்களுக்கு, 9,400 ரூபாய் கட்டணமாக வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். மேலும் விபரம் பெற நாமக்கல் மாவட்ட அங்ககச்சான்று ஆய்வாளர் ஹேமலதா, 8825895746 என்ற மொபைல் எண்ணிலோ அல்லது அங்ககச்சான்று உதவி இயக்குனர் ராமச்சந்திரன், 9443393026 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செயல்படும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04286291401 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X