பொது செய்தி

தமிழ்நாடு

மழை காலத்தில் மக்களுக்கு பாதிப்பு வராமல் நடவடிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: ''மழை காலத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அரசு கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த கட்டாரியா கூறினார்.நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த, 1ல், இரவு கனமழை கொட்டியது. இதனால் பள்ளிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியிலும், சாலையிலும் மழை நீர் ஆறாக ஓடியது. இந்நிலையில், நேற்று

பள்ளிபாளையம்: ''மழை காலத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அரசு கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த கட்டாரியா கூறினார்.


நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த, 1ல், இரவு கனமழை கொட்டியது. இதனால் பள்ளிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியிலும், சாலையிலும் மழை நீர் ஆறாக ஓடியது. இந்நிலையில், நேற்று மாலை நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த கட்டாரியா, பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகம் வந்தார். அங்கு பாதிக்கப்பட்ட நாளன்று எடுக்கப்பட்ட போட்டோ, சீரமைத்த பிறகு எடுக்கப்பட்ட போட்டோ வைக்கப்பட்டு இருந்தது. அந்த படங்களை பார்த்து அவர் விளக்கம் கேட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட நான்கு சாலை சந்திப்பு, அன்னை சத்யாநகர் பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டிசம்பர் வரை மழை காலம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். வடிகால் சுத்தம் செய்தல், அடைப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளும் செய்யப்படும். மரங்கள் விழுதல், மின் கம்பம் சேதம், பாதிப்பு போன்றவைகளை முன்கூட்டிய தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலத்தில் பொதுமக்களுக்கு பிரச்னைகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X