பொருட்களை திருடி மரத்தடியில் வீசி சென்றவர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொருட்களை திருடி மரத்தடியில் வீசி சென்றவர் மீது வழக்கு

Added : அக் 06, 2021
Share
எருமப்பட்டி: சேந்தமங்கலம் அருகே, வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த பொருட்களை திருடி, அருகில் உள்ள மரத்தடியில் வீசி விட்டு சென்றவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சேந்தமதங்கலம் அருகே பொட்டம்புதூரை சேர்ந்தவர் சந்தோஷம், 52, கூலி தொழிலாளி. இவர் தினமும் காலை, 9:00 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டிற்கு வருவார். இவர் வீட்டின் அருகே சுரேஷ்குமார், 38,

எருமப்பட்டி: சேந்தமங்கலம் அருகே, வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த பொருட்களை திருடி, அருகில் உள்ள மரத்தடியில் வீசி விட்டு சென்றவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


சேந்தமதங்கலம் அருகே பொட்டம்புதூரை சேர்ந்தவர் சந்தோஷம், 52, கூலி தொழிலாளி. இவர் தினமும் காலை, 9:00 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீட்டிற்கு வருவார். இவர் வீட்டின் அருகே சுரேஷ்குமார், 38, என்பவர் குடியிருந்து வருகிறார். முட்டை லாரிக்கு லோடு ஏற்றும் பணி செய்து வருகிறார். சுரேஷ்குமார், சந்தோஷம் வீட்டின் வழியாக நடந்து செல்லும் போது, சந்தோஷம் சுரேஷ்குமாரை பார்த்து எச்சில் துப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், சந்தோஷம் வீட்டில் இல்லாத போது பீரோவில் இருந்த மொபைல்போன், மார்க்சீட், 'டிசி' உள்ளிட்ட பொருட்களை திருடியுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த சந்??தோஷம், பீரோ திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரணையில், சந்தோஷம் வீட்டில் இருந்து திருடிய பொருட்களை, அருகில் இருந்த மரத்தின் கீழ் சுரேஷ்குமார் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து சுரேஷ்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X