சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடம்பூர் மலையில் சுவாமி சிலை அவமதிப்பு: வாலிபர்களை கைது செய்யக்கோரி மறியல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
சத்தியமங்கலம்: கம்பத்ராயன் கிரி பெருமாள் சுவாமியை அவமதித்தவர்களை, கைது செய்யக்கோரி, கடம்பூர் மலையில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில், அடர்ந்த வனப்பகுதி மலை உச்சியில் கம்பத்ராயன் கிரி பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், இங்கு சிறப்பு பூஜை நடப்பது

சத்தியமங்கலம்: கம்பத்ராயன் கிரி பெருமாள் சுவாமியை அவமதித்தவர்களை, கைது செய்யக்கோரி, கடம்பூர் மலையில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில், அடர்ந்த வனப்பகுதி மலை உச்சியில் கம்பத்ராயன் கிரி பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், இங்கு சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். கடந்த மூன்றாவது சனிக்கிழமை கடம்பூர், சத்தி, கோபி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 5,???க்கும் மேற்பட்ட பக்தர்கள், கம்பத்ராயன் கிரி பெருமாளை வழிபட்டனர். அப்போது சில வாலிபர்கள், மது போதையில், கோவிலில் குத்தியிருந்த வேல் கம்புகளை எடுத்து ரகளையில் ஈடுபட்டனர். ஆபாசமாகவும் பேசியுள்ளனர். இதுகுறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர். இது பரவியதால், கடம்பூர் மலை பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடம்பூர் மலை பஸ் நிறுத்தம் அருகே, 200க்கும் மேற்பட்ட மக்கள், இந்து முன்னணியினர் நேற்று மதியம் குவிந்தனர். சுவாமி சிலைகளை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். கடம்பூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 'சிலை அவமதிப்பில் ஈடுபட்ட, பசுவனாபுரம் பகுதியை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோரை, கைது செய்யும் வரை, மறியலில் ஈடுபடுவோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோபி டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையில், பேச்சுவார்த்தை நடத்தி, சிலைகளை அவமதித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கவே, கலைந்து சென்றனர். இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X