பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : அக் 06, 2021
Share
Advertisement
பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலைப்பகுதியில், ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் நேற்று

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலைப்பகுதியில், ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம் நேற்று மதியம், 12:00 மணிக்கு, 102 அடியை தொட்டது. அணை பாதுகாப்பு விதிமுறைப்படி, நிர்ணயித்த கொள்ளளவான, 102 அடியை எட்டியதால், பவானி ஆற்றில், 2,300 கன அடி தண்ணீர் உபரி நீராக திறக்கப்பட்டது. ஏற்கனவே கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து, 4,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம், 102 அடியாகவும், நீர் இருப்பு, 30.3 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. வினாடிக்கு, 4,634 கன அடி தண்ணீர் வரத்தானது. பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால், கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் அணை இரண்டாவது முறையாக, நிர்ணயித்த கொள்ளளவு, 102 அடியை எட்டி, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X