பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் காங்கிரசில் கோஷ்டி பூசல்: இரு இடங்களில் நடந்த போராட்டம்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர், காங்.,ல் கோஷ்டி பூசலால், சொற்ப அளவிலான நிர்வாகிகளே இரு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், காங்., வேட்பாளரான கோபிநாத், கடந்த, 2001, 2006 மற்றும் 2011 சட்டசபை தேர்தல்களில் என மூன்று முறை வெற்றி பெற்றார். கோஷ்டி பூசலால் அக்கட்சியின் செல்வாக்கு குறைந்ததால், 2016 தேர்தலில், அ.தி.மு.க.,விடம் தோல்வியடைந்தார். பின், 2019 இடைத்தேர்தல், 2021

ஓசூர்: ஓசூர், காங்.,ல் கோஷ்டி பூசலால், சொற்ப அளவிலான நிர்வாகிகளே இரு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதியில், காங்., வேட்பாளரான கோபிநாத், கடந்த, 2001, 2006 மற்றும் 2011 சட்டசபை தேர்தல்களில் என மூன்று முறை வெற்றி பெற்றார். கோஷ்டி பூசலால் அக்கட்சியின் செல்வாக்கு குறைந்ததால், 2016 தேர்தலில், அ.தி.மு.க.,விடம் தோல்வியடைந்தார். பின், 2019 இடைத்தேர்தல், 2021 சட்டசபை தேர்தலில், காங்., கட்சிக்கு செல்வாக்கு இல்லாததால், தி.மு.க.,வில் சீட் வழங்கவில்லை. நிர்வாகிகள் பலர், கட்சியை விட்டு விலகி, மாற்றுக்கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்., தலைவர் முரளிதரன் கட்சியினரை அரவணைத்து செல்லாதது, அவர் மீதான அதிருப்தியால், கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில், காங்., பொதுச்செயலர் பிரியங்கா கைதை கண்டித்து, ஓசூரில் நேற்று, காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோஷ்டி பூசலால், ரயில்வே ஸ்டேஷன் முன், மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் சாலை மறியலும், நகர தலைவர் நீலகண்டன் தலைமையில், ராம்நகரில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இரண்டிலும் சேர்த்து பெண் நிர்வாகிகள் ஒருசிலர் உட்பட மொத்தம், 80 பேர் கூட இல்லை. இதே நிலையில் இருந்தால், எந்த முன்னணி கட்சியுடன் காங்., கூட்டணி வைத்தாலும், ஓசூர் தொகுதி மட்டுமின்றி, உள்ளாட்சி தேர்தலில், மேயர் சீட் கூட கேட்டு பெற முடியாது என, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X