பொது செய்தி

தமிழ்நாடு

சிறுதொழிலை பாதிக்கும் அம்சங்களை நீக்க வேண்டும்: நிதியமைச்சரிடம் ஹோஸ்டியா சங்கம் வலியுறுத்தல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
ஓசூர்: சிறு, குறு தொழிற்சாலைகளை பாதிக்கும் வகையில், ஜி.எஸ்.டி.,யில் உள்ள அம்சங்களை நீக்க வேண்டும் என, ஓசூர் ஹோஸ்டியா சங்கம், நிதியமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளது.சென்னை தலைமை செயலகத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, ஓசூர் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் மூர்த்தி, செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேலு,

ஓசூர்: சிறு, குறு தொழிற்சாலைகளை பாதிக்கும் வகையில், ஜி.எஸ்.டி.,யில் உள்ள அம்சங்களை நீக்க வேண்டும் என, ஓசூர் ஹோஸ்டியா சங்கம், நிதியமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளது.


சென்னை தலைமை செயலகத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, ஓசூர் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்க (ஹோஸ்டியா) தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் மூர்த்தி, செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேலு, செயற்குழு உறுப்பினர் மாதையன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ஜி.எஸ்.டி., சட்டத்தில், சிறு தொழில் நிறுவனங்களை பாதிக்கும் வாகன உதிரிபாகங்களுக்கான வரியை, 28 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக குறைக்க வேண்டும். காலதாமதமாக கட்டிய வரிக்கு உண்டான, 18 சதவீத அபராத வட்டியை குறைத்து, சிறுதொழில் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும். தாமதமாக வரி கட்டும்போது, உரிமம் ரத்து போன்ற ஆபத்தான அம்சங்களை நீக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஓசூர் தொழில் நகரம் வளர்ச்சிக்கு, மெட்ரோ ரயில் சேவை, ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை வரை ரயில் வசதி, விமான நிலையம், புதிய தொழில் பேட்டைகள், நவீன குடியிருப்பு வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை, தொலைநோக்கு பார்வையுடன் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, குறு, சிறு நடுத்தர தொழில் துறை செயலாளர் அருண்ராய் ஆகியோரிடமும் மனு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X