சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.சாண்ட், கிரானைட் கல் கடத்திய லாரிகள் பறிமுதல்

Added : அக் 06, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில், எம்.சாண்ட் மற்றும் கிரானைட் கற்கள் கடத்திய மூன்று லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது கணவாய்பட்டி, மங்களபுரம் பஸ் ஸ்டாப் அருகில் நின்றிருந்த டாரஸ் லாரியை சோதனை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில், எம்.சாண்ட் மற்றும் கிரானைட் கற்கள் கடத்திய மூன்று லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர். அப்போது கணவாய்பட்டி, மங்களபுரம் பஸ் ஸ்டாப் அருகில் நின்றிருந்த டாரஸ் லாரியை சோதனை செய்ததில், மூன்று யூனிட் எம்.சாண்ட் மணல் கடத்தியது தெரிந்தது. இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு புகார் அளித்தனர். பீமண்டஹள்ளி அரசு தொடக்கப்பள்ளி அருகே கேட்பாரற்று நின்றிருந்த லாரியில், 1.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தியது தெரிந்து, குருபரப்பள்ளி போலீசாருக்கு புகார் அளித்தனர். அதேபோல கடந்த, 3ல் இரவு, 11:30 மணிக்கு, கந்திகுப்பம் கூட்ரோடு அருகே கேட்பாரற்று நின்றிருந்த லாரியை சோதனையிட்டபோது, அதில், 1.28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் கடத்தியது தெரிந்தது. இதுகுறித்து கந்திகுப்பம் போலீசாருக்கு புகார் அளித்தனர். அதன்படி, மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X