சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தாய், மகன் தற்கொலை

Added : அக் 06, 2021
Share
Advertisement
ப.வேலூர்: உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விரக்தியடைந்த நிலையில், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த தாய், மகன் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.நாமக்கல் மாவட்டம், ப.வேலூர், சுல்தான்பேட்டை சேடர் தெருவை சேர்ந்தவர் சையத் அக்பர், 60. இவர் மனைவி பாத்திமா, 55. இவர்களுக்கு சிக்கந்தர் பாஷா, 35, பர்கத், 30, என்ற இரு மகன்கள் உள்ளனர். சிக்கந்தர்

ப.வேலூர்: உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விரக்தியடைந்த நிலையில், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்த தாய், மகன் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், தந்தை சிகிச்சை பெற்று வருகிறார்.


நாமக்கல் மாவட்டம், ப.வேலூர், சுல்தான்பேட்டை சேடர் தெருவை சேர்ந்தவர் சையத் அக்பர், 60. இவர் மனைவி பாத்திமா, 55. இவர்களுக்கு சிக்கந்தர் பாஷா, 35, பர்கத், 30, என்ற இரு மகன்கள் உள்ளனர். சிக்கந்தர் பாஷா திருமணமாகி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் பர்கத், பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் கடிதம் கொடுத்து, பக்கத்து தெருவில் உள்ள என் மைத்துனரிடம் கொடுத்துவிடும்படி, சையத்அக்பர் கூறியுள்ளார். அதில், 'கதவு திறந்திருக்கிறது; விளக்கு எரிகிறது' என, குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. மொபைல் போனில் தகவல் தெரிவிக்காமல், கடிதம் கொடுத்துவிட்டதுடன், அதில் உள்ள வாசகங்களை பார்த்ததும், அதிர்ச்சியடைந்த மைத்துனர் மற்றும் அவரது குடும்பத்தினர், அலறியடித்து வீட்டுக்கு வந்துள்ளனர். அதற்குள், குளிர்பானத்தில் விஷத்தை கலந்து மனைவி பாத்திமா, மகன் பர்கத் ஆகியோருடன் சேர்ந்து, சையத் அக்பர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அங்கு வந்து பார்த்தபோது, மூன்று பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு, ப.வேலூரில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பாத்திமா, பர்கத் இருவரும் உயிரிழந்தனர். சையத் அக்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ப.வேலூர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சையத் அக்பர், பாத்திமா இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதும், பர்கத் மனநிலை சரியில்லாததால், அவரை விட்டு சென்றால், யார் பார்த்துக் கொள்வார்கள் என்பதால், விரக்தியடைந்த மூவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X